Super User / 2012 ஜூலை 15 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை மாகாண சபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை தெரிவு செய்து கொள்வது தொடர்பாக சில வாரங்களுக்கு முன்னர் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இப்போது எவரும் அதைப் பற்றி அவ்வளவு அக்கறை காடடுவதாக தெரியவில்லை.
மாகாணமும் ஞாபகத்திற்க வந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மழையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் சப்ரகமுவ மாகாணத்தில் கூட்டு சேர்ந்து போட்டியிட எடுத்த முடிவு முக்கியமான நிகழ்வாக கொள்ளப்பட்டாலும் அது அம்மாகாண தேர்தலின் இறுதி முடிவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
ஆனால் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு இவர்கள் எவ்வாறு கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற போகிறார்கள் என்ற கேள்வி பலரது மனதில் அப்போது எழுந்திருக்கலாம். ஏனெனில் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு மாறாக அரசாங்கத்தின் அமைச்சர்களால் செயற்பட முடியாது. காரணம் எதுவாக இருந்தாலும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும்; தேசிய காங்கிரஸும் தொடர்ந்தும் அந்தப் போராட்டத்தில் இப்போது இல்லை.
அதில் நியாயம் இருந்த போதிலும் ஹிஸ்புல்லாஹ் வாக்குறுதியளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டார் என்பதும் உண்மையே. எனவே இம்முறையும் முதலமைச்சர் பதவி தொடர்பாக முஸ்லிம்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டாலும் அது நிறைவேறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் கிடைத்து விடக் கூடும். முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்காக செய்யும் இது போன்ற தியாகங்களும் அர்ப்பனிப்புக்களும் ஒருபுறம் இருக்க, எதற்காக தாம் இந்தப் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப் படுவதை விரும்புகிறோம் என்பதை முஸ்லிம் தலைவர்கள் விளக்க வேண்டும். இந்தப் பதவி கிடைத்தால் தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் தெளிவாக கூர வேண்டும். AJ Sunday, 15 July 2012 01:48 PM
கிழக்கில் முஸ்லிம் மட்டும் வசிகிறார்கள்? கிழக்கில் 40% தமிழர்களும் 38% முஸ்லிம் மற்றும் 22% சிங்களவரும் வசிகிறார்கள்.
Reply : 0 0
AJ Sunday, 15 July 2012 02:02 PM
தமிழர்களுக்கு செய்யும் கொடுமைகளை தடுக்க தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கில் தமிழர் ஒருவே முதலமைச்சர் ஆகா வரவேண்டும். அது சந்திரகாந்தனாலும் சரி சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பனாலும் சரி.
Reply : 0 0
vb Sunday, 22 July 2012 12:18 AM
நல்ல கனவு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .