A.P.Mathan / 2012 ஜூலை 17 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருகின்ற ஓகஸ்ட் 12ஆம் திகதி சென்னையில் நடைபெறும் டெசோ மாநாடு திசை திரும்பியிருக்கிறது. "சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு" என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் வடசென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "இன்னும் எத்தனை ஆண்டுகளோ எனக்குத் தெரியாது. அதற்குள் மிச்சமிருக்கின்ற ஆண்டுகளில் தமிழ் ஈழத்திற்கான உரத்தை- அதற்கான பலத்தை-அதற்கான எழுச்சியை உருவாக்கி விட்டுத்தான் உங்களிடமிருந்து அல்ல- இந்த உலகத்தை விட்டே நான் விடைபெற விரும்புகிறேன்" என்று உருக்கமான உரை நிகழ்த்தி விட்டு, அந்தக் கூட்டத்தில்தான் டெசோவை மீண்டும் புதுப்பிக்கும் ஆசையை வெளியிட்டார். அந்த உரையின் இறுதியில் கூட, "தமிழ் ஈழம் பெறுவதற்கு இலங்கையிலே உள்ளவர்கள் தங்களுடைய ஒப்புதலைத் தருவதற்கேற்ற வகையில் நாம் நம்முடைய சக்தியை திரட்ட வேண்டும். அதற்கு நம்முடைய மத்திய அரசும் (இந்தியா) ஆதரவை வழங்க வேண்டும். தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ் இனத்திற்கு தமிழ் ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்" என்றார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .