Super User / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொது தராதர (உயர் தர) பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களை தரப்படுத்தும் இஸட் புள்ளி முறை இப்போது பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. அப் புள்ளி முறை மட்டுமன்றி உயர் தர பரீட்சையும் அதற்குத் தோற்றும் மாணவர்களும் அந்த நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
இதற்கு முன்னர் தரப்படுத்தல் என்ற பெயரிலேயே நடைமுறையில் இருந்த புள்ளி முறை முப்பது ஆண்டு காலமாக நீடித்த கொடிய யுத்தததிற்கும் முக்கிய காரணமொன்றாகியது. இனப்பிரச்சினையைப் பற்றிப் பேசும் எவரும் 1973ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்க பிரதமராகவும் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் கல்வி அமைச்சராவும் இருந்த காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட தரப்படுத்தல் முறையைப் பற்றி பிரஸ்தாபிக்காமல் இருப்பதில்லை.
இஸட் புள்ளி முறைக்கும் 1973ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் முறைக்கும் அடிப்படையாக அமைந்துள்ள காரணம் பல்கலைகழகங்களில் சேர்ந்து கொள்ள தகைமை பெறும் சகல மாணவர்களையும் பல்கலைகழகங்களில் சேர்த்துக் கொள்ள அரசாங்கங்கள் நடவடிக்ககை எடுக்காமையே. எனவே பல்கலைகழகளில செர்ந்து கொள்வதற்கான உண்மையான தகைமையை விட்டு விட்டு அரசாங்கங்கள் வேறு செயற்கையான தகைமைகளை உருவாக்கினறன. 1973 ஆம் ஆண்டு தரப் படுத்தல் மற்றும் இஸட் புள்ளி முறை அவ்வாறான செயற்கை தகைமைகளாகும்.kiyas Monday, 27 August 2012 12:32 PM
நல்ல பிரயோசனமான கட்டுரை
Reply : 0 0
kiyas Monday, 27 August 2012 12:36 PM
நல்ல ஆக்க பூர்வமான கட்டுரை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .