2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஏழைமக்களுக்கு வரப்பிரசாதம் இந்திய பட்ஜெட்!

Kanagaraj   / 2015 மார்ச் 03 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்'!

'அனைவரும் நோயின்றி இருக்க வேண்டும்'!
'அனைவரும் பயனடைய வேண்டும்'!ஏழைமக்களுக்கு வரப்பிரசாதம் இந்திய பட்ஜெட்!

'அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்'!
'அனைவரும் நோயின்றி இருக்க வேண்டும்'!
'அனைவரும் பயனடைய வேண்டும்'!
'யாரும் துயரப்படக் கூடாது'!-

இந்த வார்த்தைகளுடனும், நம்பிக்கையுடனும் தன்னுடைய 2015ஆம் ஆண்டு 16ஆம் திகதி இவ்வாண்டுக்கான  நிதிநிலை அறிக்கையை படித்து முடித்தார் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

நிதியமைச்சராக இருக்கும் அருண்ஜேட்லி கைதேர்ந்த வழக்கறிஞர். உச்சநீதிமன்றத்தில் தனது வாதங்களை அவர் எடுத்து வைக்கும் அழகே தனி. அதே மாதிரி இந்த முறை நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, அவர் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசின் செயல்திட்டங்களை எடுத்து வைத்த போது சங்கீதம் வாசிப்பது போன்ற இனிமை தென்பட்டது. இப்படியொரு நிதியமைச்சர் நமக்குக் கிடைக்கவில்லேயே என்று எதிர்கட்சியில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவி சோனியாவே கூட நினைத்திருக்கலாம். அப்படியொரு அற்புதமான உரை.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே மத்திய நிதி அமைச்சர் ஒரு நல்ல காரியத்தைச் செய்தார். அது மத்திய வரி வருவாயில் 42 சதவீதத்தை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற 14ஆவது நிதிக் கமிஷனின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டது. 

இதுவரை மத்தியில் இருந்த அரசுகள் செய்யாத விஷயம் இது. மத்திய- மாநில கூட்டாட்சி என்ற தத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் பிரதமர் மோடி அரசின் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது. இதுவரை 'நிதி கொடுங்கள்' என்று மாநில அரசுகள் மத்திய அரசுடன் போராடிக் கொண்டிருக்கும். மாநிலங்களை நகராட்சியை போல் கருதுகிறீர்கள் என்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவே கூட தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலேயே பேசியிருக்கிறார். இப்படியொரு சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து விட்டு இப்போது பிரதமராகியிருக்கும் மோடியின் 'மாநில அரசுகளுக்கு மதிப்புக் கொடுக்கும்' அணுகுறை மிகச் சிறந்த முன்னோடியாக இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு இந்த வருடம் மட்டும் 5.24 கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு கொடுக்கப் போகிறது. மத்திய- மாநில அரசுகளின் உறவில் இது ஒரு புது அத்தியாயம்!

இது ஒரு புறமிருக்க பாரதீய ஜனதா அரசு பொதுவாக கார்ப்பரேட்டுகளுக்கு உரிய அரசு என்ற புகார் வரும். கீழ்மட்ட மக்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பும். சமூக சிந்தனையுடன் காங்கிரஸ் கட்சிதான் செயல்படும் என்று இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்திலேயே காங்கிரஸ் கட்சிக்குப் பெயர் உண்டு. அனைத்து மாநிலங்களிலும், குறிப்பாக டெல்லியிலும் காங்கிரஸ§க்கு ஏற்பட்டுள்ள படு தோல்வி, வாக்கு வங்கிக் குறைவு போன்றவை பா.ஜ.க.வுக்கு புதிய வியூகத்தைக் கொடுத்திருக்கிறது. 

அதன்படி கார்ப்பரேட்டுகளுக்கு 30 சதவீத வரியை 25 சதவீத வரியாக குறைக்கும் அதே நேரத்தில் ஏழைகளுக்கு வருடத்திற்கு 12 ரூபாய் பிரிமியம் கட்டினால் போதும் விபத்தால் உயிரிழந்தால் 2 இலட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்ற இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு விபத்து மற்றும் இயற்கை மரணங்கள் ஏற்பட்டாலும் 2 இலட்சம் ரூபாய் கிடைக்கும் இன்சூரன்ஸ் திட்டமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
அதற்கு வருடத்திற்கு 330 ரூபாய் பிரிமியம் கட்டினால் போதும். இதன்படி பார்த்தால் ஒரு நாளுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக கட்டினாலே போதும் விபத்திலோ, இயற்கையாகவோ மரணம் அடைந்தால் 2 இலட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்ற திட்டம் கிராமப்புற, ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி வீச வைக்கும் திட்டம். ஏன் பிறந்தோம், எதற்காக வளர்ந்தோம், எப்படிச் செத்தும் என்பதையே அறியாமல் இறந்து போகும் குடும்பங்களைக் காப்பாற்ற வந்துள்ள அற்புதமான திட்டம் இது என்றால் மிகையாகாது. மத்திய அரசு அதுவும் பா.ஜ.க. தலைமையிலான அரசு இப்படியொரு திட்டத்தை ஏழைகளுக்குக் கொண்டு வந்துள்ளது என்றால் அதைத்தான் 'மோடி முத்திரை' என்று நாம் அறிகிறோம்.

இதே போல் இதுவரை பெரிய 'கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு' எப்படி கடன் கொடுப்பது, அவர்களுக்கு எப்படி சலுகைகள் கொடுப்பது என்பது மட்டுமே நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கமாக, முதல் நோக்கமாக இருக்கும். ஆனால் இந்த முறை தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் நடத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை எப்படி முன்னுக்குக் கொண்டு வரலாம் என்று சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடன் வழங்கி இந்த தொழில்களை மேம்படுத்த 20,000 கோடி ரூபாயில் 'முத்ரா' திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சுமார் 5.77 கோடி சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும். இந்திய வேலைவாய்ப்பின் பெரும்பகுதியை தீர்த்து வைக்கும் இந்த நிறுவனங்களை முதன் முதலில் கண்டுபிடித்து அதற்கு கடன் கொடுத்து கை தூக்கி விட வேண்டும் என்ற சிந்தனை டீ விற்று  பிரதமரான ஒருவருக்குத்தான் வரும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த நிதி நிலை அறிக்கை. ஏழைகள் நடத்தும் தொழில் நிறுவனங்கள், சின்னச் சின்ன நிறுவனங்களைக் காப்பாற்ற பட்ஜெட்டில் உள்ள 'மோடி முத்திரை' இது.

பெண்களின் நலனிலும் மோடிக்கு அதிக அக்கறை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையில் சுமார் 79,258 கோடி ரூபாய் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் 'ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு' 'ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணி நேர மின் சப்ளை' 'ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை' 'வறுமை ஒழிப்பு' 'பயனாளிகளின் மானியங்கள் நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் உன்னதத் திட்டம்' 'விவசாயிகளுக்கு கடன் வழங்க மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு' 'இந்த வருடத்தில் விவசாயிகளுக்கு 8.5 கோடி ரூபாய் கடன் கொடுக்க இலக்கு'- இப்படி நிதி நிலை அறிக்கையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள மேல்தட்டு மக்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், ஏழை- எளியவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் அனைவருக்கும் வாழ வழி அமைத்துக் கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே இருக்கிறது.

எல்லாவற்றுக்கும்; மேலாக தொழில்துறையை கைதூக்கி விடவும், 'கோல்ட் பான்ட்' மூலம் தங்கத்தை தேசிய சொத்தாக பாதுகாக்கவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு வருமான வரி விலக்குகள் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய நிகழ்வாகவே இருக்கிறது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அருண்ஜெட்லி, முந்தைய அரசு விட்டுச் சென்ற போது இருந்த 15 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகள் பிரதமர் மோடி வந்த பிறகு இப்போது 55 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. முந்தைய அரசில் 11.2 சதவீத இருந்த சில்லரை பணவீக்கம் இப்போது 5.1 சதவீதமாக குறைந்திருக்கிறது. 

இதற்கு முன்னாள் இருந்த அரசு காலத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 4.6 சதவீதமாக இருந்தது. ஆனால் மோடி அரசு வந்த பிறகு இப்போது இந்த பற்றாக்குறை 1.3 சதவீதமாக குறைந்திருக்கிறது. இப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதம் என்றாலும், இந்த பட்ஜெட் காலத்தில் அது 8 முதல் 8.5 சதவீதமாக அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வகையில் இந்த நிதி நிலை அறிக்கை 'கார்ப்பரேட்' 'அந்நிய முதலீடு' 'மேல்தட்டு மக்கள்' என்பதோடு நிற்காமல் ஏழைகள், கிராமங்கள், கிராம அளவில் உள்ள சிறிய சிறிய தொழில் நிறுவனங்கள் வரை ஊடுருவிச் சென்றுள்ளது. இது ஒரு வெளியில் சொல்லப்படாத 'பாப்புலிஸ்ட் பட்ஜெட்' என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஏழைகளைக் காப்பாற்றும் திட்டங்கள் இந்த நிலை நிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன. பட்ஜெட்டின் நோக்கங்கள் சிறந்தவை. அதை நடைமுறைப்படுத்துவதில் எந்த அளவிற்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்பதுதான் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் கையில் இருக்கிறது. நூறு நாட்களுக்குள் 12.50 கோடி வங்கிக் கணக்குகளையும், 9 மாதத்திற்குள் 50 லட்சம் கழிப்பிடங்களையும் கட்டி முடித்த பா.ஜ.க. அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துப் பார்த்தால், இந்த பட்ஜெட் இந்தியாவை நிஜமான உயரத்திற்கு எடுத்துச் செல்லும். அதில் எள் அளவும் சந்தேகமில்லை!

'யாரும் துயரப்படக் கூடாது'!-

-இந்த வார்த்தைகளுடனும், நம்பிக்கையுடனும் தன்னுடைய 2015-16-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை படித்து முடித்தார் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

நிதியமைச்சராக இருக்கும் அருண்ஜேட்லி கைதேர்ந்த வழக்கறிஞர். உச்சநீதிமன்றத்தில் தனது வாதங்களை அவர் எடுத்து வைக்கும் அழகே தனி. அதே மாதிரி இந்த முறை நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, அவர் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசின் செயல்திட்டங்களை எடுத்து வைத்த போது சங்கீதம் வாசிப்பது போன்ற இனிமை தென்பட்டது. இப்படியொரு நிதியமைச்சர் நமக்குக் கிடைக்கவில்லேயே என்று எதிர்கட்சியில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவி சோனியாவே கூட நினைத்திருக்கலாம். அப்படியொரு அற்புதமான உரை.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே மத்திய நிதி அமைச்சர் ஒரு நல்ல காரியத்தைச் செய்தார். அது மத்திய வரி வருவாயில் 42 சதவீதத்தை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற 14வது நிதிக் கமிஷனின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டது. இதுவரை மத்தியில் இருந்த அரசுகள் செய்யாத விஷயம் இது. மத்திய- மாநில கூட்டாட்சி என்ற தத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் பிரதமர் மோடி அரசின் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது. இதுவரை 'நிதி கொடுங்கள்' என்று மாநில அரசுகள் மத்திய அரசுடன் போராடிக் கொண்டிருக்கும். மாநிலங்களை முனிசிபாலிட்டிகள் போல் கருதுகிறீர்கள் என்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவே கூட தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலேயே பேசியிருக்கிறார். இப்படியொரு சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து விட்டு இப்போது பிரதமராகியிருக்கும் மோடியின் 'மாநில அரசுகளுக்கு மதிப்புக் கொடுக்கும்' அணுகுறை மிகச் சிறந்த முன்னோடியாக இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு இந்த வருடம் மட்டும் 5.24 கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு கொடுக்கப் போகிறது.

மத்திய- மாநில அரசுகளின் உறவில் இது ஒரு புது அத்தியாயம்!

இது ஒரு புறமிருக்க பாரதீய ஜனதா அரசு பொதுவாக கார்ப்பரேட்டுகளுக்கு உரிய அரசு என்ற புகார் வரும். கீழ்மட்ட மக்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பும். சமூக சிந்தனையுடன் காங்கிரஸ் கட்சிதான் செயல்படும் என்று இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்திலேயே காங்கிரஸ் கட்சிக்குப் பெயர் உண்டு. அனைத்து மாநிலங்களிலும், குறிப்பாக டெல்லியிலும் காங்கிரஸ§க்கு ஏற்பட்டுள்ள படு தோல்வி, வாக்கு வங்குக் குறைவு போன்றவை பா.ஜ.க.விற்கு புதிய வியூகத்தைக் கொடுத்திருக்கிறது. அதன்படி கார்ப்பரேட்டுகளுக்கு 30 சதவீத வரியை 25 சதவீத வரியாக குறைக்கும் அதே நேரத்தில் ஏழைகளுக்கு வருடத்திற்கு 12 ரூபாய் பிரிமியம் கட்டினால் போதும் விபத்தால் உயிரிழந்தால் 2 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்ற இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு விபத்து மற்றும் இயற்கை மரணங்கள் ஏற்பட்டாலும் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் இன்சூரன்ஸ் திட்டமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வருடத்திற்கு 330 ரூபாய் பிரிமியம் கட்டினால் போதும். இதன்படி பார்த்தால் ஒரு நாளுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக கட்டினாலே போதும் விபத்திலோ, இயற்கையாகவோ மரணம் அடைந்தால் 2 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்ற திட்டம் கிராமப்புற, ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி வீச வைக்கும் திட்டம். ஏன் பிறந்தோம், எதற்காக வளர்ந்தோம், எப்படிச் செத்தும் என்பதையே அறியாமல் இறந்து போகும் குடும்பங்களைக் காப்பாற்ற வந்துள்ள அற்புதமான திட்டம் இது என்றால் மிகையாகாது. மத்திய அரசு அதுவும் பா.ஜ.க. தலைமையிலான அரசு இப்படியொரு திட்டத்தை ஏழைகளுக்குக் கொண்டு வந்துள்ளது என்றால் அதைத்தான் 'மோடி முத்திரை' என்று நாம் அறிகிறோம்.

இதே போல் இதுவரை பெரிய 'கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு' எப்படி கடன் கொடுப்பது, அவர்களுக்கு எப்படி சலுகைகள் கொடுப்பது என்பது மட்டுமே நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கமாக, முதல் நோக்கமாக இருக்கும். ஆனால் இந்த முறை தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் நடத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை எப்படி முன்னுக்குக் கொண்டு வரலாம் என்று சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடன் வழங்கி இந்த தொழில்களை மேம்படுத்த 20,000 கோடி ரூபாயில் 'முத்ரா' திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சுமார் 5.77 கோடி சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும். இந்திய வேலைவாய்ப்பின் பெரும்பகுதியை தீர்த்து வைக்கும் இந்த நிறுவனங்களை முதன் முதலில் கண்டுபிடித்து அதற்கு கடன் கொடுத்து கை தூக்கி விட வேண்டும் என்ற சிந்தனை டீ விற்று  பிரதமரான ஒருவருக்குத்தான் வரும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த நிதி நிலை அறிக்கை. ஏழைகள் நடத்தும் தொழில் நிறுவனங்கள், சின்னச் சின்ன நிறுவனங்களைக் காப்பாற்ற பட்ஜெட்டில் உள்ள 'மோடி முத்திரை' இது.

பெண்களின் நலனிலும் மோடிக்கு அதிக அக்கறை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையில் சுமார் 79,258 கோடி ரூபாய் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு' 'ஒவ்வொரு வீட்டுக்கும்; 24 மணி நேர மின் சப்ளை' 'ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை' 'வறுமை ஒழிப்பு' 'பயனாளிகளின் மான்யங்கள் நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் உன்னதத் திட்டம்' 'விவசாயிகளுக்கு கடன் வழங்க மட்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு' 'இந்த வருடத்தில் விவசாயிகளுக்கு 8.5 கோடி ரூபாய் கடன் கொடுக்க இலக்கு'- இப்படி நிதி நிலை அறிக்கையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள மேல்தட்டு மக்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், ஏழை- எளியவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் அனைவருக்கும் வாழ வழி அமைத்துக் கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தொழில்துறையை கைதூக்கி விடவும், 'கோல்ட் பான்ட்' மூலம் தங்கத்தை தேசிய சொத்தாக பாதுகாக்கவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு வருமான வரி விலக்குகள் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய நிகழ்வாகவே இருக்கிறது. 
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அருண்ஜெட்லி, முந்தைய அரசு விட்டுச் சென்ற போது இருந்த 15 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகள் பிரதமர் மோடி வந்த பிறகு இப்போது 55 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. முந்தைய அரசில் 11.2 சதவீத இருந்த சில்லரை பணவீக்கம் இப்போது 5.1 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதற்கு முன்னாள் இருந்த அரசு காலத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 4.6 சதவீதமாக இருந்தது. ஆனால் மோடி அரசு வந்த பிறகு இப்போது இந்த பற்றாக்குறை 1.3 சதவீதமாக குறைந்திருக்கிறது. இப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதம் என்றாலும், இந்த பட்ஜெட் காலத்தில் அது 8 முதல் 8.5 சதவீதமாக அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வகையில் இந்த நிதி நிலை அறிக்கை 'கார்ப்பரேட்' 'அந்நிய முதலீடு' 'மேல்தட்டு மக்கள்' என்பதோடு நிற்காமல் ஏழைகள், கிராமங்கள், கிராம அளவில் உள்ள சிறிய சிறிய தொழில் நிறுவனங்கள் வரை ஊடுருவிச் சென்றுள்ளது. இது ஒரு வெளியில் சொல்லப்படாத 'பாப்புலிஸ்ட் பட்ஜெட்' என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஏழைகளைக் காப்பாற்றும் திட்டங்கள் இந்த நிலை நிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன. பட்ஜெட்டின் நோக்கங்கள் சிறந்தவை. அதை நடைமுறைப்படுத்துவதில் எந்த அளவிற்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்பதுதான் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் கையில் இருக்கிறது. நூறு நாட்களுக்குள் 12.50 கோடி வங்கிக் கணக்குகளையும், 9 மாதத்திற்குள் 50 இலட்சம் கழிப்பிடங்களையும் கட்டி முடித்த பா.ஜ.க. அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துப் பார்த்தால், இந்த பட்ஜெட் இந்தியாவை நிஜமான உயரத்திற்கு எடுத்துச் செல்லும். அதில் எள் அளவும் சந்தேகமில்லை!

ஏழைமக்களுக்கு வரப்பிரசாதம் இந்திய பட்ஜெட்!
'அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்'!
'அனைவரும் நோயின்றி இருக்க வேண்டும்'!
'அனைவரும் பயனடைய வேண்டும்'!
'யாரும் துயரப்படக் கூடாது'!-

-இந்த வார்த்தைகளுடனும், நம்பிக்கையுடனும் தன்னுடைய 2015-16ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை படித்து முடித்தார் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

நிதியமைச்சராக இருக்கும் அருண்ஜேட்லி கைதேர்ந்த வழக்கறிஞர். உச்சநீதிமன்றத்தில் தனது வாதங்களை அவர் எடுத்து வைக்கும் அழகே தனி. அதே மாதிரி இந்த முறை நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, அவர் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசின் செயல்திட்டங்களை எடுத்து வைத்த போது சங்கீதம் வாசிப்பது போன்ற இனிமை தென்பட்டது. இப்படியொரு நிதியமைச்சர் நமக்குக் கிடைக்கவில்லேயே என்று எதிர்கட்சியில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவி சோனியாவே கூட நினைத்திருக்கலாம். அப்படியொரு அற்புதமான உரை.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே மத்திய நிதி அமைச்சர் ஒரு நல்ல காரியத்தைச் செய்தார். அது மத்திய வரி வருவாயில் 42 சதவீதத்தை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற 14ஆவது நிதிக் கமிஷனின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டது. இதுவரை மத்தியில் இருந்த அரசுகள் செய்யாத விஷயம் இது. மத்திய- மாநில கூட்டாட்சி என்ற தத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் பிரதமர் மோடி அரசின் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது. இதுவரை 'நிதி கொடுங்கள்' என்று மாநில அரசுகள் மத்திய அரசுடன் போராடிக் கொண்டிருக்கும். 

மாநிலங்களை நகராட்சிகள் போல் கருதுகிறீர்கள் என்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவே கூட தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலேயே பேசியிருக்கிறார். இப்படியொரு சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து விட்டு இப்போது பிரதமராகியிருக்கும் மோடியின் 'மாநில அரசுகளுக்கு மதிப்புக் கொடுக்கும்' அணுகுறை மிகச் சிறந்த முன்னோடியாக இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு இந்த வருடம் மட்டும் 5.24 கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு கொடுக்கப் போகிறது. மத்திய- மாநில அரசுகளின் உறவில் இது ஒரு புது அத்தியாயம்!

இது ஒரு புறமிருக்க பாரதீய ஜனதா அரசு பொதுவாக கார்ப்பரேட்டுகளுக்கு உரிய அரசு என்ற புகார் வரும். கீழ்மட்ட மக்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பும். சமூக சிந்தனையுடன் காங்கிரஸ் கட்சிதான் செயல்படும் என்று இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்திலேயே காங்கிரஸ் கட்சிக்குப் பெயர் உண்டு. அனைத்து மாநிலங்களிலும், குறிப்பாக டெல்லியிலும் காங்கிரஸ§க்கு ஏற்பட்டுள்ள படு தோல்வி, வாக்கு வங்குக் குறைவு போன்றவை பா.ஜ.க.விற்கு புதிய வியூகத்தைக் கொடுத்திருக்கிறது. 

அதன்படி கார்ப்பரேட்டுகளுக்கு 30 சதவீத வரியை 25 சதவீத வரியாக குறைக்கும் அதே நேரத்தில் ஏழைகளுக்கு வருடத்துக்கு 12 ரூபாய் பிரிமியம் கட்டினால் போதும் விபத்தால் உயிரிழந்தால் 2 இலட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்ற இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு விபத்து மற்றும் இயற்கை மரணங்கள் ஏற்பட்டாலும் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் இன்சூரன்ஸ் திட்டமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வருடத்திற்கு 330 ரூபாய் பிரிமியம் கட்டினால் போதும். 

இதன்படி பார்த்தால் ஒரு நாளுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக கட்டினாலே போதும் விபத்திலோ, இயற்கையாகவோ மரணம் அடைந்தால் 2 இலட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்ற திட்டம் கிராமப்புற, ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி வீச வைக்கும் திட்டம். ஏன் பிறந்தோம், எதற்காக வளர்ந்தோம், எப்படிச் செத்தும் என்பதையே அறியாமல் இறந்து போகும் குடும்பங்களைக் காப்பாற்ற வந்துள்ள அற்புதமான திட்டம் இது என்றால் மிகையாகாது. மத்திய அரசு அதுவும் பா.ஜ.க. தலைமையிலான அரசு இப்படியொரு திட்டத்தை ஏழைகளுக்குக் கொண்டு வந்துள்ளது என்றால் அதைத்தான் 'மோடி முத்திரை' என்று நாம் அறிகிறோம்.

இதே போல் இதுவரை பெரிய 'கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு' எப்படி கடன் கொடுப்பது, அவர்களுக்கு எப்படி சலுகைகள் கொடுப்பது என்பது மட்டுமே நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கமாக, முதல் நோக்கமாக இருக்கும். ஆனால் இந்த முறை தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் நடத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை எப்படி முன்னுக்குக் கொண்டு வரலாம் என்று சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடன் வழங்கி இந்த தொழில்களை மேம்படுத்த 20000 கோடி ரூபாயில் 'முத்ரா' திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சுமார் 5.77 கோடி சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும். இந்திய வேலைவாய்ப்பின் பெரும்பகுதியை தீர்த்து வைக்கும் இந்த நிறுவனங்களை முதன் முதலில் கண்டுபிடித்து அதற்கு கடன் கொடுத்து கை தூக்கி விட வேண்டும் என்ற சிந்தனை டீ விற்று  பிரதமரான ஒருவருக்குத்தான் வரும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த நிதி நிலை அறிக்கை. ஏழைகள் நடத்தும் தொழில் நிறுவனங்கள், சின்னச் சின்ன நிறுவனங்களைக் காப்பாற்ற பட்ஜெட்டில் உள்ள 'மோடி முத்திரை' இது.பெண்களின் நலனிலும் மோடிக்கு அதிக அக்கறை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையில் சுமார் 79258 கோடி ரூபாய் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் 'ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு' 'ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணி நேர மின் சப்ளை' 'ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை' 'வறுமை ஒழிப்பு' 'பயனாளிகளின் மான்யங்கள் நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் உன்னதத் திட்டம்' 'விவசாயிகளுக்கு கடன் வழங்க மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு' 'இந்த வருடத்தில் விவசாயிகளுக்கு 8.5 கோடி ரூபாய் கடன் கொடுக்க இலக்கு'- இப்படி நிதி நிலை அறிக்கையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள மேல்தட்டு மக்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், ஏழை- எளியவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் அனைவருக்கும் வாழ வழி அமைத்துக் கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தொழில்துறையை கைதூக்கி விடவும், 'கோல்ட் பான்ட்' மூலம் தங்கத்தை தேசிய சொத்தாக பாதுகாக்கவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு வருமான வரி விலக்குகள் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய நிகழ்வாகவே இருக்கிறது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அருண்ஜெட்லி, முந்தைய அரசு விட்டுச் சென்ற போது இருந்த 15 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகள் பிரதமர் மோடி வந்த பிறகு இப்போது 55 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. முந்தைய அரசில் 11.2 சதவீத இருந்த சில்லரை பணவீக்கம் இப்போது 5.1 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதற்கு முன்னாள் இருந்த அரசு காலத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 4.6 சதவீதமாக இருந்தது. ஆனால் மோடி அரசு வந்த பிறகு இப்போது இந்த பற்றாக்குறை 1.3 சதவீதமாக குறைந்திருக்கிறது. இப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதம் என்றாலும், இந்த பட்ஜெட் காலத்தில் அது 8 முதல் 8.5 சதவீதமாக அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வகையில் இந்த நிதி நிலை அறிக்கை 'கார்ப்பரேட்' 'அந்நிய முதலீடு' 'மேல்தட்டு மக்கள்' என்பதோடு நிற்காமல் ஏழைகள், கிராமங்கள், கிராம அளவில் உள்ள சிறிய சிறிய தொழில் நிறுவனங்கள் வரை ஊடுருவிச் சென்றுள்ளது. இது ஒரு வெளியில் சொல்லப்படாத 'பாப்புலிஸ்ட் பட்ஜெட்' என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஏழைகளைக் காப்பாற்றும் திட்டங்கள் இந்த நிலை நிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன. பட்ஜெட்டின் நோக்கங்கள் சிறந்தவை. அதை நடைமுறைப்படுத்துவதில் எந்த அளவிற்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்பதுதான் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் கையில் இருக்கிறது. நூறு நாட்களுக்குள் 12.50 கோடி வங்கிக் கணக்குகளையும், 9 மாதத்திற்குள் 50 லட்சம் கழிப்பிடங்களையும் கட்டி முடித்த பா.ஜ.க. அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துப் பார்த்தால், இந்த பட்ஜெட் இந்தியாவை நிஜமான உயரத்திற்கு எடுத்துச் செல்லும். அதில் எள் அளவும் சந்தேகமில்லை!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .