2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எழில் ததும்பும் 'சொரபொர' வாவி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் ஒன்றாக 'சொரபொர' வாவியும் அதனைச் சூழவுள்ள பகுதியும் விளங்குகின்றது.

அம்பாறை மாவட்டத்தையும் பதுளை மாவட்டத்தையும் இணைக்கும் எல்லைப் பிரதேசமான மஹியங்கனைப் பகுதியில் இயற்கை அழகு பொருந்தியதாக 'சொரபொர' வாவி அமையப்பெற்றுள்ளது.

கி.மு. 102ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பிரதேசத்தை ஆட்சி செய்த துட்டகைமுனு மன்னனால் நீர்ப்பாசனத்தை விருத்தி செய்து  விவசாய நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டதே இந்த வாவியென வரலாறு கூறுகின்றது.

தற்போது நாட்டில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த வாவியைப் பார்வையிடுவதற்காக அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாளாந்தம் வந்தவண்ணமுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • alm faizar Tuesday, 06 September 2011 06:04 PM

    சூப்பர் அப்பா. நல்ல இடம். எல்லோரும் போய்ப் பார்க்கவும்.

    Reply : 0       0

    gaf Wednesday, 07 September 2011 04:09 AM

    இவ்வாறான அறிமுகம் கட்டாயம் தேவை. நன்றி.

    Reply : 0       0

    vijee mandeur sri lanka Thursday, 08 September 2011 11:18 AM

    இதை அறிமுகப்படுத்திய அப்துல் அலீஸ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    Reply : 0       0

    asaf Friday, 09 September 2011 02:31 PM

    நம் நாட்டு பன்னாடைகள் குப்பை போடாமல் இருந்தால் சரி.

    Reply : 0       0

    tharik.mtm Saturday, 10 September 2011 08:33 PM

    இலங்கையின் அமைந்துள்ள அழகிய இடங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொருவரும் அங்கு செல்லும் போது உணர்ந்து கொள்ள முடியும்.

    Reply : 0       0

    faslan Monday, 12 September 2011 12:38 AM

    நாங்களும் பாவமில்ல.... எங்களுக்கும் விட்டு வைங்க. நாங்களும் பார்க்கணும்.

    Reply : 0       0

    m.i.m.musadique Friday, 04 November 2011 09:54 PM

    எழில் கொஞ்சும் இயற்கையை இரசிப்பதற்கு ...... சிலைவந்து போதனை புரியாமல் இருந்தால் எல்லாமே நல்லாக அமையும்.

    Reply : 0       0

    gaffoor Wednesday, 09 November 2011 03:15 PM

    அழகிய இடங்களை அசிங்கப்படுத்தாமல் இருந்தால் போதும்.

    Reply : 0       0

    SAMMSUDEEN MOHAMED HUMAITH Thursday, 01 December 2011 05:11 PM

    சூழல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் பாதுகாக்க வேண்டும். இலங்கையின் அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .