Amirthapriya / 2018 மே 30 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தளங்களில் திருகோணமலையில் அமைந்துள்ள, இயற்கைத்துறைமுகமானது, சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் இடங்களில் ஒன்றாகும்.
இத்துறைமுகத்தின் சிறப்பம்சங்கள் எண்ணிலடங்காதவையாகும். உலகின் மூன்றாவது மிகப் பெரிய துறைமுகமாக இது விளங்குவதுடன், இயற்கையாக அமையப்பெற்றுள்ள மூன்று விரிகுடாக்களையும் கொண்டு காணப்படுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இத்துறைமுகத்தை சென்று பார்வையிட சில மீற்றர்கள் இலங்கை கடற்படையினரின் அனுமதியுடன் உள்ளே செல்ல வேண்டும். அத்துடன் கடற்படையினரின் முகாம்களுடன் இத்துறைமுகம் காணப்படுகின்றமையால் துறைமுகம் பற்றிய அனைத்துவிதமான தகவல்களையும் அவர்களின் வழிகாட்டலுடன் அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பும் கிட்டும்.
உயரமான மலைப்பாங்கான இடமாகையால், அங்கிருந்து துறைமுகத்தின் அழகினையும், கடற்பரப்பையும் காணும் காட்சி மிகவும் இரம்மியமானதாகும். மேலும் திருகோணமலை துறைமுகத்துடன் சம்பந்தப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தகவல் களஞ்சியங்களையும் பார்வையிடலாம்.

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026