Editorial / 2018 மார்ச் 26 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தலைநகரான கொழும்பின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அழகிய கடற்கரையே பென்தொட்டைவிரிகுடா ஆகும். இங்குள்ள நை்தோட்டைப் பாலம் மற்றும் பெந்தோட்டை விரிகுடா ஆகிய இரண்டையும் ஒருசேரப் பார்க்கும் பொழுது, அழகிய இரட்டைக் கடற்கரையை காண்பது போல காட்சியளிக்கும்.

நவம்பர் தொடக்கம் ஏப்ரல் மாதங்களில், இங்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இக்காலப் பகுதியில் இவ்விரிகுடாவானது, மிக அமைதியான நீரோட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் இக்கடற்கரையை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.

மேலும் இவ்விரிகுடாவில் டைவிங் (Diving), படகோட்டம், நீர்ச் சறுக்கு (Water-sking) ஆகிய நீர் விளையாட்டுக்களில், இங்கு வருகை தருவோர் ஈடுபவதைக் காணக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும்.

பென்தொட்ட விரிகுடாவானது மிக அதிகமாக வெளியூர் மக்களையே கவர்ந்துள்ளது. இங்கு வருகை தரும் பயணிகளின் கணக்கெடுப்பில் அதிகமானளவு வெளிநாட்டு மக்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக விடுதிகள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பன இவ்விரிகுடாவிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026