Editorial / 2017 நவம்பர் 05 , பி.ப. 12:28 - 1 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்திலேயே நாட்டில் அதிகளவான நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் சாதாரணமாக 109 நீர்வீழ்ச்சிகள் உயிர்ப்பு நிலையில் உள்ளன. இதில் போபத் நீர்வீழ்ச்சி மிகவும் முக்கியமான நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகின்றது.
கொழும்பு - இரத்தினபுரி வீதியில், குருவிட்டை நகரிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் இந்த போபத் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
களுகங்கையின் முக்கிய கிளை ஆறான குருகங்கையில் அமைந்துள்ள போபத் நீர்வீழ்ச்சி, மொத்தம் 30 மீ்ற்றர் (100 அடி) உயரத்திலிருந்து பாய்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் பெயர், இதன் வடிவத்தைக் கொண்டமைந்த காரணப்பெயராகும். அதாவது, ‘போபத்’ என்பது சிங்கள மொழியில் ‘அரசமர இலை’ என்பதைக் குறிக்கும்.
இந்த நீர்வீழ்ச்சிக்கருகில் உல்லாசப் பிரயாணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் சகல வசதிகளும் காணப்படுகின்றன.
குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மாத்திரமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.
34 minute ago
48 minute ago
54 minute ago
58 minute ago
B.manju Wednesday, 29 May 2019 02:17 AM
Pothatha karuthukkal ullana kuduthalana thagaval vendum
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
54 minute ago
58 minute ago