Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 25 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் இயற்கைப் பூங்காவாகும். இப்பூங்கா 1984 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி திட்டத்தின்போது, இடம்பெயர்ந்த காட்டு விலங்குகளை பாதுகாக்க மற்றும் அடைக்கலம் செய்யும் நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நான்கு தேசிய பூங்காக்களில் ஒன்றாகும்.
யானைகளை பெரிய கூட்டங்கூட்டமாக காணக்கூடிய, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வஸ்கமுவயும் ஒன்றாகும். மேலும், இது இலங்கையிலுள்ள முக்கிய பறவை பகுதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
முதலாம் பராக்கிரமபாகு மூலம் கட்டப்பட்ட மலகமுவ, வில்மிடிய, டஸ்தொட்ட போன்ற நீர்ப்பாசன குளங்களின் இடிபாடுகள் மற்றும் கலிங்கா, யோதா எல கால்வாய் என்பன இத்தேசிய பூங்காவில் எஞ்சியுள்ளன. பண்டைய காலத்தில் மினிப்பே அணைக்கட்டின், இடது கரை கால்வாயிலிருந்து பராக்கிரம சமுத்திரத்திற்கு அம்பன் கங்கை மூலம் பாய்ச்சப்பட்ட நீரானது வஸ்கமுவ ஊடகவே செல்லக்கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
வஸ்கமுவ தேசிய பூங்காவனது, 23 வகையான பாலூட்டிகளுக்கு உறையுள்ளாக காணப்படுகிறது. இங்கு 150 இலங்கை யானை கூட்டங்களால் குடியிருக்கப்படுகிறது. சதுப்பு நில யானைகள் மகாவலி ஆற்றுப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும் பூங்காவில் தென்படும் குரங்குகள் இலங்கைக்கே உரித்தானவையாகும். அதே வேலை நீர் எருமை மற்றும் இலங்கை அச்சு மான் என்பன பொதுவாக காணக்கூடியவையாக உள்ளன. இலங்கை சிறுத்தை மற்றும் கரடி என்பன அரிதாகவே உள்ளன.
இப்பூங்காவில் பதிவு செய்யப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 143 ஆகும். இவை 8 தனிச்சிறப்பான இனங்களை உள்ளடக்கியுள்ளது. சில பிரதேசங்களில் அரிதாக காணப்படும் செம்முக பூங்குயிலானது இப்பூங்காவிட்கே உரிய குடியுரிமை பறவை என்பது சிறப்புக்குரியதாகும்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago