2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'அச்சமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளுங்கள்'

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் அச்சமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சுற்றாடல் பாதுகாப்புடன் தொடர்புடைய சகல நிறுவனங்களினதும் தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
 
அத்தகைய தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆதரவாக இருப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று (05) முற்பகல் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் இல் நடைபெற்ற வளி தர முகாமைத்துவம் தொடர்பான 6ஆவது தேசிய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  இதனைத் தெரிவித்தார்.

இயற்கையைப் பாதுகாப்பதற்காக இன்று மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை ஒருபோதும் நாளைக்கு காலம்தாழ்த்த முடியாது என்றும் இயற்கையின் இருப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை எவ்வித தாமதங்களுமின்றி உரிய முறையில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இயற்கையைப் பாதுகாத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோசம் இன்று ஒரு சர்வதேச கோசமாக மாறியுள்ளது.

வளி மாசடைதல் மற்றும் வளி மாசடைதல் காரணமாக ஏற்படும் மோசமான நிலைமைகளுக்கு இன்று முழு உலகமும் முகங்கொடுத்திருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உலகின் எல்லா முக்கிய நாடுகளினதும் தலைவர்கள் அடுத்தடுத்து சுற்றாடல் சார்ந்த மாநாடுகளை நடாத்தி அவசர அவசரமான தீர்மானங்களை மேற்கொள்வது அதன் மோசமான விளைவுகளை விளங்கிகொண்டுள்ள காரணத்தினாலாகும் என்றும் குறிப்பிட்டார்.

'2025 தூய வளி செயற்பாட்டுத்திட்டம்' வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் முதற் பிரதி இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X