2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'ஆணைக்குழு முன் சமுகமளிக்க முடியாது'

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று (13) அழைப்பு விடுக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தெஜனி ஆகியோர் தம்மால் ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக முடியவில்லையென இரண்டாவது தடவையாகவும் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர். 

தாம் நாட்டில் இல்லாதபடியால் இன்று வரமுடியவில்லையென அவர்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர் என ஆணைக்குழுவின் பேச்சாளார் கூறினார். 

விமானப் படையினரின் விமானங்களை, தமது தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். 

இவ்விடயம் தொடர்பில் ஏற்கெனவே கடந்த 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளிலும் ஆணைக்குழுவுக்கு இவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். 

ஆனால், அப்போதும் அவர்கள் நாட்டுக்கு வெளியே இருப்பதால் வர முடியவில்லையெனக் கூறியிருந்தனர். 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X