2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'ஆவா பீதியை கிளப்ப முயற்சி '

Menaka Mookandi   / 2016 நவம்பர் 20 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ஆவா குழு தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கு, சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

காலியில் சனிக்கிழமையன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் இல்லையேல் நாட்டுக்குள் மீண்டும் மோதல்கள் ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.

அவரது கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துதெரிவித்த போதே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு பங்கம் ஏற்பட்டுவிட்டதாக, மக்கள் மத்தியில் அச்ச உணர்வை தூண்டுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆவா குழு என்பது பாதாளஉலக கோஷ்டியாகும். அவ்வாறான ஆவா குழுவினால், தேசிய பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த முடியாது. சிலர், இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு முயலுகின்றனர் என்றும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .