2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘இடதால் முந்த இடமளிக்கவும்’

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வீதிச் சட்டங்களை மீறுகின்ற, மிகவும் பாரதூரமான 7 குற்றங்களுக்கான ஆகக்குறைந்த அபராதத்தை, 25 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிப்பதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், சில குற்றங்களுக்கு நடைமுறையில் பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது" என, அகில இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.  

இது தொடர்பில், அச்சங்கத்தினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மகஜரொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   

“வாகனங்களை, இடது பக்கத்தால் முந்திச் செல்லும் குற்றத்துக்காகவும், மேற்படி அபராதம் விதிக்கப்படுகின்றது. இது, நடைமுறையில் சாத்தியமன்ற நடவடிக்கையாகும். அத்துடன், மோட்டார் சைக்கிள்கள், இடது பக்கத்தால் முந்திச் செல்வதால், விபத்துக்களும் குறைவடைகின்றன” என்று, அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .