2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இறுதி யுத்த விவகாரம்: சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணை

Thipaan   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற அயல் நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புகள் போர்க்குற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்கலாம்.

ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையின் படி, யுத்தம் முடியும் வரையான ஐந்து மாதங்களில் 40,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போரில் பொதுமக்கள் உயிரிழந்தமைக்கு காரணமானவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் சரி, விடுதலைப்புலிகளாக இருந்தாலும் சரி அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உறுதி செய்ய அரசாங்கம் விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X