2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

2010இல் கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரை, குற்றவாளியாக இனங்கண்ட சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று வெள்ளிகிழமை (02) தீர்ப்பளித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியன்று, வென்னப்புவயில் உள்ள சைனீஸ் உணவகமொன்றின் உரிமையாளர் கொலைச்செய்யப்பட்டிருந்தார்.

எனினும் இந்தக் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட முதலாவது சந்தேக நபர், 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மற்றுமொறு சம்பவத்தில் கொலைச்செய்யப்பட்டிருந்ததாகவும் இரண்டாவது சந்தேக நபரே நேற்று குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாவது சந்தேக நபர், கொலைச்சம்பவத்தையடுத்து, இத்தாலிக்குச் சென்றிருந்ததாகவும் 4 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வந்த அவரை, கடந்த 22ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் கைது செய்திருந்ததாகவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .