2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

2015 இல் 1.8 மில்லியன் பேர் பார்க்க வந்தனர்

Princiya Dixci   / 2016 ஜனவரி 06 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டில் அண்ணளவாக 1.8 மில்லியன், சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2014, டிசெம்பரில் 178,672 பேர் வருகை தந்ததாகவும் 2015, டிசெம்பரில் 206,114 பேர் வருகை தந்ததாகவும் இது 15.4 சதவீத அதிகரிப்பு என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

2015இல் மொத்தமாக 1,796,380 சுற்றுலாப் பயணிகளும் 2014 இல் 1,527,153 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். இது 17.8 சதவீத அதிகரிப்பாகும். 

மேற்கு ஐரோப்பிய நாட்டினரே 2015இல் அதிகளவில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளாவர். 

வட- அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் தொகை கடந்த வருடம் 89,943 ஆக இருந்தது. இது 16.9 சதவீத அதிகரிப்பாகும். 

கிழக்கு ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் தொகை 148,458 ஆகும். இது 3.7 சதவீத வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. 

மத்திய ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் 101,066 ஆக இருந்தது. இது 13.6 சதவீத அதிகரிப்பாகும். 

கிழக்கு ஆசிய நாட்டினர் 362,857 சுற்றுலாப்பயணிகள் வந்தனர். இது 29.4 சதவீத அதிகரிப்பாகும். 

சீனா நாட்டு சுற்றுலாப்பயணிகள் 214,783 பேர் வருகை தந்துள்ளனர். இது 67.6 சதவீத அதிகரிப்பாகும். 

தெற்காசிய நாடுகளிலிருந்து 459,415 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இது 24.1 சதவீத அதிகரிப்பாகும். 

இந்திய சுற்றுலாப் பயணிகள் 316,247 பேர் வருகை தந்துள்ளனர். இது 30.3 சதவீத அதிகரிப்பாகும். 

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் 71,672 பேர் வருகை தந்துள்ளனர். இது 9.8 சதவீத அதிகரிப்பாகும். 

2015இல் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறையில் வருவாயாக 1.956 பில்லியன் அமெரிக்க டொலர்  பெறப்பட்டுள்ளது. இது 17.9 சதவீத அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X