Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 06 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் 14 நாடுகளில் 1,508 இலங்கைப் பிரஜைகள் மரணமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண, புதன்கிழமையும் (04) நேற்று வியாழக்கிழமையும் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலேசியா, தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளிலும் கடந்த 5 ஆண்டுகளில், இலங்கைப் பிரஜைகள் 64 பேர் மரணித்துள்ளனர் என்று அமைச்சர் தலதா அத்துக்கோரள புதன்கிழமை (04) தெரிவித்தார்.
மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளில் இலங்கைப் பிரஜைகள் 1,444 பேர் மரணித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
விபத்துக்கள் மற்றும் நோய்கள் காரணமாகவே இவர்கள் மரணித்துள்ளனர் என்றும் அங்கவீனமடைந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அறிக்கையின் பிரகாரம் 294 தொழிலாளர்களுக்கு நட்டஈடு, காப்புறுதி இழப்பீடு மற்றும் தொழிலாளர் நலன்புரி நிதி வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago