2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்'

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதிகரித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், இலங்கையில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

ஊடக சுதந்திரதினத்தையொட்டி அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

'நூற்றியென்பது நாடுகளைக் கொண்ட ஊடக சுதந்திரப் பட்டியலில் இலங்கை நூற்றிநாற்பத்தியொராவது இடத்தைப் பிடித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பல்வேறு துன்புறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் கொலைகள் போன்ற பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்ற போதும் அவற்றைக் குறித்து  பாராமுகமாக இருந்தார்கள் என்பது இரகசியமல்ல. இந்த சம்பவங்கள் குறித்து சரியான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு தற்போதைய அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.

அதேவேளை, இப்படியான அடக்கு முறைகள் காணப்பட்ட போதும், தமது கடமையை துணிச்சலாக முன்னெடுத்துவரும் ஒவ்வொரு ஊடகவியலாளர்களையும் நான் பாராட்ட விரும்புகிறேன். 

தொடர்ந்தும் மக்களுக்கு உண்மையை எடுத்து செல்லும் பாரிய  பணியை செய்யும் நீங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியோடு இன்னும் சிறப்பாக துணிவாக உங்கள் பணியை செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X