Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்னை நாடிவரும் நமது சமூகத்தின் இந்த ஒதுக்கப்பட்ட பிரிவினரின் கண்ணீரை துடைக்க வேண்டியது என் கடமை என்பதை நான் உணர்ந்துள்ளேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் காணமல் போன உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கும் தொடரும் அச்சுறுத்தல் மற்றும் தொல்லைகள் உடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கொண்டுதான் நான் கொழும்பிலிருந்து இங்கு வந்துள்ளேன். நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்து என்னை என் அமைச்சில் சந்தித்த அம்பாறை- மட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐம்பது சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் தங்கள் கண்ணீர் கதைகளை சொல்லி அழுதார்கள்.
காணாமல் போன உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் செய்யாதே, ஊர்வலம் நடத்தாதே என்ற நேரடி அச்சசுறுத்தல்கள், தொலைபேசி அழைப்புகள், இரவு நேர கதவு தட்டல்கள், தங்கள் வீடுகளில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளை இவர்கள் என்னிடம் சொல்லி அழுதார்கள். அதேபோல் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஒரு சர்வதேச மனிதவுரிமை மாநாட்டின் போது, மனிதவுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்னராஜாவுடன் என்னை சந்தித்த முன்னாள் பெண் போராளி சகோதரிகள் தங்கள் சோகத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். இந்த போராளிகளில் ஒரு சிலர் உடல் ஊனமுற்றவர்களாகவும் உள்ளார்கள்.
மட்டக்களப்பு, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில், உறவுகளை தேடி அலையும் அப்பாவி மக்களுக்கும், இவர்களுக்காக பணியாற்றும் சிவில் தொண்டர் நிறுவன செயற்பாட்டாளர்களுக்கும் இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவது தொடர்பில், இந்த மக்களுக்காக தொடர்ந்து போராடிவரும், காணமல் போனோர் சங்கத்தை சார்ந்த சிங்கள முற்போக்கு மனிதவுரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ எனக்கு எழுத்து மூலமாக புகாரை தந்துள்ளார். அத்துடன் சுயாதீன மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணநாதனும் இதுபற்றி என்னிடம் விபரித்துள்ளார். மனிதவுரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோவும் இது தொடர்பில் என்னிடம் கூறியுள்ளார்.
கடந்தக்கால ஒட்டுக்குழு உறுப்பினர்களிடமிருந்தும், பொலிஸ், இராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் தமிழ், சிங்கள மொழிகளை பேசும் நபர்களிடமிருந்து இத்தகைய அச்சறுத்தல்கள் தொடர்வதாக எனக்கு புகார்கள் கிடைத்துள்ளன. இது இந்நாட்டில் இன சகவாழ்வுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் ஆகும். அத்துடன், இந்த நாட்டில் அரசுசாரா சிவில் அமைப்புகள் எனது அமைச்சின் பொறுப்பில் இருக்கின்றன. இந்நிலைமை இனியும் தொடர என்னால் அனுமதியளிக்க முடியாது.
கடந்த மஹிந்த ஆட்சிகாலத்தில் நடந்திருந்த இத்தகைய போக்குகள் உடன் முடிவுக்கு வரவேண்டும் என நான் நேற்று, கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் பிரதி மாஅதிபர் லலித் ஜயசிங்கவுக்கு விசேட பணிப்புரை வழங்கியுள்ளேன். இந்த சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக புகார் செய்யப்பட்டுள்ள திருக்கோவில் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டாரவை அழைத்து விசாரணைகளை முன்னெடுக்கும்படி கடும் பணிப்புரையை வழங்கியுள்ளேன். இத்தகைய சம்பவங்கள் தொடருமானால் அவை எங்கள் அரசுக்கு எதிரான மஹிந்த ராஜபக்ஷ, பிரிவினருக்கு சார்பான நடவடிக்கைகளாகவே கருதப்படும் என நான் இவர்களிடம் கூறியுள்ளேன். என்னிடம் புகார்களை தெரிவித்த தாய்மார்களுக்கு மேலும் தொல்லைகள் தரப்படுமானால், இந்த பொலிஸ் அதிகாரிகளே அவற்றுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்புக் கொண்டு இதை அறிவித்தேன். பொலிஸ் துறையினர் இத்தகைய விசாரணைகளை நிறுத்தி விட்டதாக அறிக்கை கிடைத்துள்ளதென என்னிடம் தெரிவித்த பிரதமர் விக்கிரமசிங்க, பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க, பாதுகாப்பு துணை அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, கிழக்கு மற்றும் வடக்கு பிராந்திய பொலிஸ் பிரதி மா அதிபர்கள் ஆகியோரை அழைத்து ஒரு கலந்துரையாடலை உடன் நடத்தும்படி கூறியுள்ளார். இந்த கலந்துரையாடல் அடுத்த வாரம் அலரி மாளிகையில் நடைபெறும். இதன்போது சம்பந்தப்பட்ட அரசுசாரா சிவில் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago