Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 நவம்பர் 16 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெலும் பண்டார
'அரசாங்கம், ஏற்கெனவே பல தீர்மானங்களை எடுத்துள்ளது. மேலும் அது, எடுக்கும் நடவடிக்கைகளையிட்டும் சில உறுதிப்பாடுகளையும் வழங்கிவிட்டது. இந்த நிலைமையில், ஏனைய கட்சிகளின் கருத்தைக் கேட்பதால் ஆகப்போவது யாதுமில்லை' என முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி மாநாட்டைப் பற்றி கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'அரசாங்கம், பல விடயங்களைச் செய்வதாக உறுதியளித்துள்ளது. இவை, நாட்டின் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமையும்; இவ்வாறானதே' என அவர் கூறினார்.
வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவந்து விசாரணைகளை நடத்துவதற்காக வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசி வருகின்றது. இது பெரும் கவலையளிக்கும் விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நீதிபதிகளின் வருகை பற்றி ஏனைய கட்சிகளோடு ஆலோசிக்கப்பட்டதா என அவர் கேட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின் படி நடக்கின்றதா எனவும்; கேட்டார்.
அரசாங்கம் இந்த முடிவுகளை எடுத்தது மட்டுமின்றி, அவற்றை செயற்படுத்தும் கட்டத்துக்கும் வந்துவிட்டது என அவர் கூறினார்.
புலி உறுப்பினர்கள் 31பேரை விடுவித்ததை உதாரணமாகக் காட்டிய அவர், எதேச்சாதிகாரமான முடிவுகளை எடுத்துவிட்டு, அவற்றை அங்கிகரிக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் இந்த அரசாங்கம் கேட்கின்றது.
இந்தத் தீர்மானங்களுக்கும் வேறு கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறினார்.
18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
2 hours ago