Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றவியல் விடயங்களின் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ், ஒழுங்குவிதிகள் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தத் திருத்தச் சட்டம், அரசியலமைப்புக்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
2015ஆம் ஆண்டு, டிசெம்பர் 11ஆம் திகதிய ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த விடயம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1887 தண்டனைக் கோவையின் சில ஏற்பாடுகளுக்கு, புதிய ஏற்பாடு ஒன்றை புகுத்துவது, இந்தச் சட்டமூலத்தின் நோக்கமாகும் என்பதுடன், 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் செயன்முறைக் கோவையைத் திருத்தவும், இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுகிறது.
புதிதாக வரும் சட்ட ஏற்பாடொன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒரு பிரிவாக உள்ளது என்றும் அக்கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தித்தான் முன்னைய அரசாங்கம், தமிழ், முஸ்லிம் சமுதாயங்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தியதுடன், அவர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பறித்தது.
தமிழ் ஊடகவியலாளர் ஜே. எஸ். திஸநாயகத்துக்கு, 20 வருடச் சிறைத் தண்டனை விதிக்கவும், இச்சட்டமே பிரயோகிக்கப்பட்டது. முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலியைக் கைது செய்யவும் தடுத்துவைக்கவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 2(1)(எச்) பிரிவு பயன்படுத்தப்பட்டது என்றும், கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பின் 14(1) (அ) பிரிவின் பிரகாரம், பேச்சுச் சுதந்திரமும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரமும் உள்ளது. எனினும், புதிய திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் மேற்குறிப்பிட்ட பிரிவுக்கு முரணானதாக உள்ளது என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .