2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

200 கிலோகிராம் ‘இனிக்காத சீனி’ மீட்பு

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ஒருகொடவத்த கொள்கலன் தளத்திலிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து, 200 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.   

மீட்கப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி 2 பில்லியன் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.    குறித்த கொள்கலன், பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

சீனி ஏற்றப்பட்டதாகத் தெரிவித்துப் பேணப்பட்டு வந்த கொள்கலன் ஒன்றில் இருந்தே, இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக, தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .