2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிசிலியா கொத்தலாவல வைத்தியசாலையில் அனுமதி

George   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வந்த போது கைதுசெய்யப்பட்டதையடுத்து திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோல்டன் கீ நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அதன் நிரந்தர வைப்பாளர்கள், தமது வைப்பு பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் இலங்கையிலிருந்து தப்பிச்சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு இவர் இலங்கையிலிருந்து சென்ற நிலையில், இங்கிலாந்திலிருந்து கட்டார் வழியாக இலங்கைக்கு வருகைதந்த போது, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X