2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சென்னைக்கான விமான சேவைகள் இரத்து

Thipaan   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 8ஆம் திகதிவரை சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, சென்னைக்கான பல விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இத்தகவலையைடுத்து, டிசெம்பர் 6ஆம் திகதி சேவையில் ஈடுபடவிருந்த யூ.எல் 121, யூ.எல் 122, யூ.எல் 127, யூ.எல் 128, யூ.எல் 123, யூ.எல் 124 மற்றும் 8ஆம் திகதி சேவையிலீடுபடவிருந்த யூ.எல் 125, யூ.எல் 126, யூ.எல் 122, யூ.எல் 127, யூ.எல் 128, யூ.எல் 123, யூ.எல் 124 மற்றும் யூ.எல் 125 ஆகிய விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், மிஹின் லங்கா நிறுவனத்தின் எம்.ஜே 129 மற்றும் எம்.ஜே 130 ஆகிய விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமானது, நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சென்னை விமான நிலையம் வழமைக்குத் திரும்பியதும் சேவைகள் தொடரப்படும் எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X