Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 10 , மு.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்திகேசு
'நாடாளுமன்றம் அதியுயர் சபையே தவிர, அது மல்யுத்தக்களம் அல்ல. அவைக்குள் இரத்தம் சிந்தியமை கண்டிக்கத்தக்கது என்பதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுய ஒழுக்கக் கோவையை பின்பற்றாதுவிடின் எந்த ஒழுக்கநெறிக்கோவைகளைக் கொண்டுவந்தாலும் பயனில்லை' என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சட்டங்களை இயற்றுதல் தொடர்பிலான சிக்கல்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமது வாதத்திறமையால் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமே ஒழிய கைக்கால்களை நீட்டிக்கொள்ளக்;கூடாது.
உலகில் உள்ள பல நாடுகளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.இலங்கையின் வரலாற்றில் இதற்கு முன்னரும் முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
அவை கைகலப்பில் மாத்திரமே நின்றது, ஆனால், வரலாற்றில் முதற்தடவையாக நாடாளுமன்ற உறுப்பிரொருவர் அவைக்குள் வைத்து இரத்தம் சிந்தியுள்ளார். இதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.
உறுப்பினர்களது நடவடிக்கைகள் நகைச்சுவைக்குரிய தொரு விடயமாகிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை
குறித்து ஒழுக்க கோவையொன்று உள்ளது. அவை தொடர்பிலான மறு பரீசிலனைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், உறுப்பினர்கள் தங்கள் மத்தயில் சுய ஒழுக்கக் கோவையைப் பின்பற்றாவிடில் எவ்வளவு ஒழுக்கநெறிக்கோவைகள் கொண்டுவந்தாலும் பயனில்லை என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago