2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'சி.வியை கைது செய்'

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.

கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு அரசாங்கத்தின் வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல்முறையாக தமிழ் பிரிவினைவாத ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுசரனை கிடைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, இனவாதத்தை கக்குகின்ற சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்யுமாறும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .