2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வோம்'

Princiya Dixci   / 2016 ஜூன் 03 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதுபோல, மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலான சர்வதேச விசாரணையை முழுமையாக இல்லாமல் செய்ய தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக, பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எமக்குக் காலம் தேவை. நினைத்தவுடன் மாற்றத்தை கொண்டுவருவதற்கு நாம் ஒன்றும் அலாவுதீன் அல்ல. மக்கள் நினைத்த மாற்றத்தை, இன்னும் 60 மாதங்களில் நிச்சயம் ஏற்படுத்துவோம்' என்றார்.

நல்லாட்சி மலர்வதற்கு முன்னர், ஜெனீவா, மின்சாரக் கதிரை என்ற விடயங்களே பிரதான கருப்பொருளாகக் கொண்டு பேசப்பட்டன. ஆனால், அவ்விடயம் தொடர்பில் இப்போது பேசப்படுவதில்லை.

இலங்கையை வெறுத்திருந்த நாடுகளில் பல நாடுகள் எம்முடன் நட்புற கொண்டுள்ளன. எங்களுக்கு உதவிக்கரம் நீட்டுக்கின்றன. ஜப்பானில் இடம்பெற்ற ஜி 7 மாநாடு இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

உலக நாடுகளின் ஆதரவும் உதவியும் தற்போது எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆதரவை கொண்டு, இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் விவகார சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டுவருகிறது.

தற்போதுள்ள நிலையில்,  சர்வதேசத்துடனான நட்புறவை முறித்துக்கொண்டு செயற்படுவோமானால் நாடு அதாலபாதாளத்துக்கு சென்றுவிடும். அதுபோல பட்டினி, வறுமை உள்ளிட்டவைகளும் மக்களை சூழ்ந்துக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .