2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘சரணாகதி அரசியல் செய்யவில்லை’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்வதன் நோக்கத்தை, அந்தக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தாங்கள்,  சரணாகதி அரசியல் செய்யவில்லை என அடித்துக்கூறும் செல்வம் அடைக்கலநாதன், தற்போதைய அரசாங்கத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி இருப்பதாகவும்  குறிப்பிட்டார்.

சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும். அந்தச் சந்தர்ப்பங்கள் தான், எமக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாம், எமது மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை. எங்களுக்கு உணர்வு இருக்கின்றது. எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் வகையிலும் அவர்கள் இந்த நாட்டில் சுதந்திரக் காற்றை உணரும் வகையிலும், எமது செயற்பாடுகள் இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .