2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'ஜெயாவின் புகழ் நிலைக்கும்'

George   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயலலிதாவின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி,  இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வௌியிட்டுள்ளார்.

“உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு சில நாளில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் சிகிச்சை அளித்தும், அரசியல் கட்சித் தலைவர்கள், இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், தாய்மார்கள் வாழ்த்தியதுக்கு மாறாகவும், ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்று செய்திக் கேட்டு வருந்துகிறேன்.

கட்சி ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், அவரது கட்சி நலனுக்காக பல துணிச்சலான காரியங்களை ஆற்றியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

குறைந்த வயதில் இறந்துவிட்டார் என்ற போதும், அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவரது கட்சி முன்னணியினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக்கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .