George / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
சென்னை, அப்பலோ வைத்தியசாலையில், செப்டெம்பர் 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசெம்பர் 5ஆம் திகதி இரவு 11:30 மணிக்கு மரணமடைந்தார்.
அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி வைத்தியநாதன், கூறியதாவது, “முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார் என, செய்திகள் வெளியாகின.
ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது” என்றார்.
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago