2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'நாட்டில் துரித அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன'

Kogilavani   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியில் நிலவி வருகின்றமையை முன்னிட்டு, மிலேனியம் சலஞ் கோப்ரோசன் என்ற அமெரிக்கத் தனியார் நிறுவனமொன்று 15 கோடி ரூபாய் பணத்தினை  நாட்டின் அபிவிருத்திக்கென, மீளச் செலுத்தாத நிதியாக வழங்க எண்ணியுள்ளது. இதுவே நாட்டுக்கு அபிவிருத்திக்கெனக் கிடைக்கின்ற ஒரு சாதிகமான ஒரு அமைப்பாகவுள்ளது என விசேட கடமைபொறுப்புக்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'நாட்டின் வருமானத்தினை 1.8 மில்லியனாக எதிர்வரும் வருடம் அதிகரிக்க எண்ணியுள்ளதாகவும், அதேநேரம் துண்டு விழும் தொகையை நூற்றுக்கு 5.5 சதவீதமான முன்னேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,

'அதேநேரம் புதிய அரசியலமைப்பின் 17 ஆவது திருத்ததின் மூலமான வரவு-செலவுத் திட்டத்தில், வறுமையை இல்லதொழிப்பது, நாட்டின் உள்நாட்டு ஏற்றுமதியை வளப்படுத்தி மக்களிடம் வரியறவிடுகின்றமையை இல்லதொழிப்பது, நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் என்பவற்றை உள்ளடங்குகின்றது,

'„வற்... வரியானது 11 சதவீதமாக அறவிடப்பட்டது 15 சதவீதமாக அதிகரிக்க எண்ணியுள்ளதாகவும், முன்னைய வரவு-செலவுத்திட்டத்தின் பிரகாரம் வருடந்த வருமானம் 12 மில்லியன் பெறுபவர்களை உள்ளடங்கியது. அது இம்முறை நீக்கப்பட்டு வருடாந்த வருமானமாக 50 மில்லியன் ரூபாயை விடவும் அதிகமாகப் பெறுபவர்களை உள்ளடக்குகின்றது. இதனால் சில்லறை வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் விலக்கப்படுகின்றனர், எனத் தெரிவித்தார்.

'நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற வருமானது 180 மில்லியன் ரூபாயாக இருந்தது. இவை, சுங்க வரி, கலால் வரி, வருமான வரி என்பவற்றின் மூலமாகக் கிடைக்கின்றது. இவற்றில் பெருமளவானவை சுங்கம் மூலம் கிடைக்கின்ற வரித்தொகை. குறித்த தொகையானது கடந்த அரசாங்கத்திலும் வந்தது, பல நிதிகள் காணமல் செல்லப்பட்டுள்ளன. குறித்த பணங்கள் எங்கே சென்றன என்பதை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரிடம் கேளுங்கள் எனத் தெரிவித்தார். அவை கடந்த அரசாங்கத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கென வாகன உதிரிப்பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, தனியாருக்க விற்பனை செய்யப்பட்டன. அவற்றில் கிடைத்த இலாபத்தில் 3 ஒரு பங்கு சுங்கத்திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் 3 சுங்கத்திணைக்கள அதிகாரிகள் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்துள்ளமை,' குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .