Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்ல ஒழுக்கப் பண்பாடுடைய மனிதர்களை உருவாக்குவதற்கு ஆன்மீகத் தத்துவங்கள் பெரிதும் உதவுவதாகவும் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரம், தற்போது நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தெம்பல, ரத்தொளுகம மெதடிஸ்த தேவாலயத்தின் இருநூறாவது ஆண்டுநிறைவு விழாவில் இன்று (04) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதைகளை அமைத்தல், கட்டடங்களை அமைத்தல் போன்ற பௌதீக அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மனிதனது ஆன்மீகப் பண்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் நல்லொழுக்கம் அபிவிருத்தியின் ஒரு முக்கிய அளவுகோலாகும் என்றும் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவர்களின் பிள்ளைகளைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவ்வாறு பிரச்சினைகள் இருக்குமானால் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகக் குறிப்பிட்டார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago