2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'நாடாளுமன்றை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவதற்கு எதிர்ப்பை காட்டுவோம்'

Thipaan   / 2015 டிசெம்பர் 20 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளைக் கலந்தாலோசிக்கும் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவதற்கான பிரேரணையைக் கொண்டுவர அரசாங்கம் கொண்டுள்ள திட்டத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்பைக் காட்டவுள்ளதாகவும் இப்போதுள்ள அரசியலமைப்புக்கு இது எதிரானது எனவும், கூட்டு எதிரணி நேற்று ஞாயிற்றுக்கிழமை(20) கூறியது.

புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் செயன்முறையின் தொடக்கமாக, நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக செயற்படுவதற்கான ஒரு சட்டமுலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த நாளை ஜனவரி 9 உடன் பொருந்தும் முறையில், ஜனவரி 9 அன்றே ஒரு பிரேரணையை கொண்டுவரவுள்ளது.

இந்த விடயம் தொடர்பான கட்சிப் பிரதிநிதிகள் சபாநாயகர் கருஜயசூரியவுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன, நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்ற ஓர் அரசியலமைப்பு பேரவை அமைக்க சட்ட ஏற்பாடு இல்லை.

அமைச்சரவையின் விவாதத்துக்கு, உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயம் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதே சட்ட முறையானது. இதற்கு மாறான வழியில் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு மாற்றங்களை கூட்டு எதிரணியினை எதிர்க்கும் என அவர் கூறினார்.

நாம் அரசியலமைப்பை மாற்றக்கூடாதெனக் கூறவில்லை. சரியான வழியில் அது மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு என அவர் கூறினார்.

அரசியலமைப்பு மாற்றத்திற்கென தனியாக குழுவை நியமித்து காலத்துக்கு காலம் அதில் முன்னேற்றத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் போவதாக வாசுதேவ நாணயக்கார உட்பட சில எதிரணியினர் கூறினர்.

இதேவளை, அரசியலமைப்பின் பிரிவு 74 இன் படி நாடாளுமன்ற அலுவலகம் நிலையிற் கட்டளைகள் அல்லது தீர்மானங்கள் மூலம் செயற்படுத்தப்படலாம். நாம் நாடாளுமன்ற தீர்மானத்தின் ஊடாக ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் செயன்முறையை நாம் தொடங்குவோம் என அவைத் தலைவர் லஷ;மன் கிரியெல்ல கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X