2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'நன்னெறிகளைப் பின்பற்றவும்'

Thipaan   / 2016 மார்ச் 01 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தில் நடந்துகொள்ளும் முறைமை பற்றி எடுத்துகூறி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எச்சரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிகளைப் பின்பற்றி நடக்குமாறு அறிவுரை வழங்கினார்.

அவருடைய தந்தையான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர படுகொலை தொடர்பான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி ஷிரான் குணரத்ன, ரணவக்க குணதிலக்க மற்றும் எம்.சீ.பீ எஸ் மொராயஸ் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, மன்றுக்கு வந்திருந்த ஹிருணிகா எம்.பி, தலைவணங்காது நீதிமன்றுக்குள் நுழைந்தார். இதனை அவதானித்ததன் பின்னரே நீதிபதிகள், மேற்கண்டவாறு எச்சரித்தனர். வழக்கின் சாட்சி விசாரணைகளை இடைநிறுத்திய நீதிபதிகள் குழு, ஹிருணிகா பிரேமசந்திரவை நீதிமன்றுக்கு முன்பாக அழைத்து, இது நீதிமன்றமாகும் என்று அறிவித்தனர். நீதிமன்றுக்குள் நுழைகையில் தலைவணங்குதல், சம்பிரதாயமாகும் என்று சுட்டிக்காட்டினர்.

நீதிமன்றத்துக்குக் கௌரவமளிக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு முகங்;கொடுக்க வேண்டிவரும் என்றும் எடுத்துரைத்து எச்சரித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X