2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'நல்லாட்சியை கவிழ்ப்பதே இலட்சியம்'

Gavitha   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 ஆண்டுக்குள் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதே எனது நோக்கம் என் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூறினார்.

“நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டை அண்மித்த பெரும்பான்மை பலம் இருந்தாலும் தற்போதைய அரசியல் நிலையை வைத்து பார்க்கும்போது, அனைத்தும் எதிர்காலத்தில் மாற்றமடையும்” என மஹிந்த ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இலங்கையிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது நேற்று அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தரப்பினருக்கு இடையில் தற்போது முரண்பாடு தோன்றியுள்ளதுடன் அதன் காரணமாக நாடு முன்னோக்கிச்​ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .