2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'நல்லாட்சியின் பாவம் மக்களைத் துரத்துகிறது'

Kogilavani   / 2016 மே 19 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

'நம்பிக்கை கொண்டு எம்மை வெற்றியடையச் செய்த மக்களுக்கு, வரிச் சுமையைக் கொடுத்து அவர்களின் சாபத்துக்கு ஆளாகிவிட்டோம். நல்லாட்சி அரசாங்கம், மக்களுக்கு பாவத்தைப் புரிந்துவிட்டது.

அந்த பாவமே, இப்போது இயற்கையின் சீற்றமாக வந்து, எம்மக்களைத் துரத்துகிறது' என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுகுறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை, எமது அரசாங்கம் பழிவாங்குவதாக கூறிக்கொண்டு திரிகிறார்கள், இவர்கள் கடந்த காலங்களில் செய்துவிட்டுச் சென்ற செயற்பாடுகளால், நாட்டு மக்களே உண்மையில் பழிவாங்கப்படுகிறார்கள்' என்றார்.  

'மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்த்து, எம்மீது நம்பிக்கை வைத்து, தேர்தல்களில் எம்மை வெற்றியடையச் செய்த மக்களுக்கு, இவ்வாறான சுமையைக் கொடுப்பது, மிகவும் கவலையாக உள்ளது.  இருப்பினும், கடந்த அரசாங்கத்தின் சுமைகளை நாட்டிலிருந்து இறக்கிவைக்க வேண்டுமெனில், சில கஷ்டங்களை நாம் அனுபவித்து ஆகவேண்டும் என்பதாலேயே, சிறிதுகூட விருப்பமின்றி வற்-இனை நாம், தற்காலிகமாக அதிகரித்துள்ளோம்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X