2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு நியூசிலாந்து பூரண ஆதரவு: பிரதமர் ஜோன்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ, நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட இலங்கை ஜனாதிபதியும் நியூசிலாந்துப் பிரதமரும், கூட்டறிக்கையை வெளியிட்டு, உரையாற்றினர். இதன்போதே, நியூசிலாந்துப் பிரதமர், மேற்கண்டவாறு அழைப்பை விடுத்தார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், 'நல்லிணக்கத்தின் சவாலான பிரச்சினைகளைத் திறம்பட கையாள்வதிலும், முன்னைய அரசாங்கத்தின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், முக்கிய பங்கு வகிக்கின்றது. அதற்கு, நியூசிலாந்து, தனது நன்றியைத் தெரிவித்துகொள்கின்றது. அத்துடன், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு, நியூசிலாந்து நடவடிக்கை எடுக்கும் என்பதுடன், ஆசியாவிலேயே பிரகாசமான நாடாக இலங்கை மிளிரும்' என்றார்.

ஜனாதிபதி உரை

இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்,

'பொதுநலவாய அமையத்தின் உறுப்பு நாடுகள் என்றவகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேம்படுத்துவதற்கு, இதுவொரு நல்ல தருணமாகும். விவசாயத்தை மையப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தொழில்நுட்ப அறிவுகளை பெற்றுக்கொள்ளவேண்டும். விவசாயத்துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவுகளை பெற்றுக்கொள்வதற்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .