2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

26 பாடசாலைகள் மூடப்பட்டன

Kanagaraj   / 2016 மே 17 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியமையை அடுத்து, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 26 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் தொடங்தெனிய வித்தியாலயலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் 25 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

புத்தளம், நிக்கரவெட்டிய, சிலாபம், கிரிஉல்ல ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X