2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

48 பாடசாலைகளில் நுளம்பு முட்டைகள்

George   / 2016 நவம்பர் 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர் மேல் மாகாணத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் போது, 48 பாடசாலைகளில் நுளம்பு முட்டைகள் இருந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

120 பாடசாலைகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, 148 அரச நிறுவனங்களிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் 48 நிறுவனங்களில் நுளம்பு முட்டைகள் இருந்ததாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்தில், நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 316 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்த அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .