Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 09 , மு.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலா செல்வது போல, சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்களாகச் செல்வதற்கு முயன்ற இலங்கைப் பெண்கள் மூவரையும் அனுப்பிவைப்பதற்கு முயன்ற ஆண்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்த மூன்று பெண்களிடமும், இவ்விரண்டு கடவுச்சீட்டுகள் இருந்துள்ளன. எனினும், அந்த மூவரும் எந்த நாட்டுக்குச் செல்கின்றனர் என்பது தொடர்பில் அறிந்திருக்கவில்லை என்றும் அப்பிரிவின் பொறுப்பதிகாரி அர்ஜுன மாஹிக்கல தெரிவித்தார்.
இந்தப் பெண்கள் மூவரையும், அரச தரப்புச் சாட்சியாளராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர், இந்த மோசடி வர்த்தகத்தின் பின்னணியில் முகவர்கள் இருக்கின்றார்களா, அந்தத் தரகர்களுக்கு அரேபியர்களிடமிருந்து பணம் கிடைக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago