2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

​போதைக்கு அடிமையான மாணவனுக்கு விளக்கமறியல்

George   / 2016 நவம்பர் 23 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதை​பொருளுக்கு அடிமையான, கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் மற்றும் அவரது  நண்பனான 27 வயதுடைய இளைஞன் ஆகியோரை, டிசெம்பர் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, இன்று  உத்தரவிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் போதை பொருள் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவன் போதை​ பொருளுக்கு அடிமையான நிலையில், அவருக்கு இளைஞன் போதை​பொருள் விநியோகித்து வந்ததாகவும் பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவனுடன் தொடர்புடைய ஏனைய மாணவர்கள் மற்றும் ஏனைய நபர்கள் தொடர்பில் ​பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .