2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

18,628 பேர் இடம்பெயர்வு

George   / 2016 ஜூன் 06 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தினால் ஒரு கிலோமீற்றருக்கு உள்ளே இருந்த 300 வீடுகள்  மற்றும் இரண்டு தொழிற்சாலைகள் என்பன முழுமையாக சேதமடைந்துவிட்டன' என்று சீதாவாக்க பிரதேச செயலாளர் எஸ்.கே.பண்டார தெரிவித்தார். 

'இதேவேளை, 5 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 1,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.

'இந்த ஒரு கிலோமீற்றருக்குள் 18 ஆயிரத்து 628 பேர், இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள், பாடசாலைகள், விஹாரை மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 11 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்' என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, முகாம்களில் இருக்கின்றவர்களுக்கு தண்ணீர் போத்தல்களை பெற்றுகொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .