2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

07 பேர்ச்சஸ் வழங்குவது கடினம்: திகா

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

மலையகத்தில் தற்போது 250,000 குடும்பங்கள் காணிகள் இல்லாமல் இருக்கின்றன. அக் குடும்பங்களுக்கு 07 பேர்ச்சஸ் காணியை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன என்று பழனி திகாம்பரம் அமைச்சராக இருக்கின்ற மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (ஒன்றிணைந்த எதிர்க்கட்சி) எம்.பியான வாசுதேவ நாயணயக்கார எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அவ்வமைச்சு, சபையில் சமர்ப்பித்த பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெருந்தோட்டங்களில் தற்போது ஏறத்தாழ 400,000 குடும்பங்கைள் காணியற்றவர்களாக உள்ளனரா? அவர்களுக்கு உடனடியாக 07 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? உள்ளிட்ட கேள்விளைக் கேட்டிருந்தார். 

அக்கேள்விகளுக்கு அமைச்சினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தேயிலை, இறப்பர் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 250,00 குடும்பங்களுக்குக் காணிகள் இல்லாதுள்ளன. இக்குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவது சாத்தியமானது. எனினும், உடனடியாக வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிர்மாணப்பணிகளுக்குப் பொருத்தமாகக் காணப்படும் நிலங்களில் தேயிலை பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. எஞ்சியிருப்பதில், பாரிய நிலப்பரப்பு நிலச்சரிவு ஏற்படக்கூடியதாக உள்ளது என கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. உயர்ந்த சாய்வான நிலப்பரப்பில் வீடுகளை நிர்மாணிப்பது சாத்தியமற்றதாகும் என்று அப்பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X