2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை'

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்படும் பஸ் பணிப்பகிஷ்கரிப்புக்கும், தமக்கும் எவ்வித தொடர்புகள் இல்லை என்றும் பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கம் என்ற வகையில்,  பொதுமக்களை கொல்வதற்கான அனுமதிக் கோரி தாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடபோவதில்லை என்றும் தனியார் பஸ் ஊழியர்களின் சங்கம் கூறியுள்ளது.

வீதிச் சட்டங்களை மீறுகின்ற 7 பாரிய குற்றங்களுக்கான ஆகக் குறைந்த அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ள அரசாங்கம், அனுமதிப்பத்திரமின்ற பஸ் செலுத்துவோரிடமிருந்து அறவிப்படும் அபராதத்தை, இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலும்  அதிகரித்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக பஸ் சங்கங்கள் பல, நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .