2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'போர்ட் மஸ்டாங்கை 2010இல் வாங்கி விற்றுவிட்டேன்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட அதிசொகுசு காரானது, கடந்த 2010ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட வரி விலக்கின் போது கிடைக்கப்பெற்றதாகும் என்று, அவ்வாகனத்தின் உரிமையாளரான, நாமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஃபோர்ட் மஸ்டாங் ரக அதிசொகுசு காரொன்றை, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைப்பற்றினர். இது தொடர்பில், கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'நாடாளுமன்ற வங்கிக் கிளையொன்றின் மூலம் பெறப்பட்ட கடன் தொகையைக் கொண்டே, மேற்படி அதிசொகுசு காரைக் கொள்வனவு செய்தேன். பின்னர் அதனை, மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்துவிட்டேன்' என்றார்.

நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்த வாகனத்தை அவர், கடந்த 2010ஆம் ஆண்டிலேயே பயன்படுத்தியுள்ளார் என்றும், அதனை பின்னர், 'ஜீ போய்' என்ற பாதாள உலகக்கோஷ்டியைச் சேர்ந்த நபருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் சந்தேகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X