Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்திகேசு
'நாட்டில் சமஷ்டி ஆட்சியென்ற ஒன்று ஏற்படுத்தப்படும். ஆனால், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாது. மாறாக பிரிவினை அதிகரிக்கும்' என, மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
'அவ்வாறானதொன்று ஏற்படுத்தப்படுமானால், வடக்கில் தமிழ் இனவாதமும் தெற்கில் சிங்கள இனவாதமுமே தலைதூக்கும். இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்ற ஒன்றைக் கட்டியெழுப்புவது என்பது நடைபெறாத விடயம்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வடமாகாணசபையின் செயற்பாடுகள் குறித்து வடக்கு மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி நிலையை மாற்றி மக்களிடம் மீண்டும் ஆதரவினைச் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றிற்காக வேண்டியே, வட மாகாண முதலமைச்சர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து நாட்டுக்குள் இனவாதத்தினைத் தூண்டும் வகையில் செயற்படுகின்றார். இலங்கைக்குள் மதம், சாதி, இன, பால் அடிப்படையில் உருவாக்கப்படும் ஆட்சியை நாங்கள் எதிர்க்கின்றோம். அதேவேளை, இலங்கையர் என்ற ரீதியில் உருவாக்கப்படும் ஆட்சியையே நாங்கள் விரும்புகின்றோம்' என்றார்.
8 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago