2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'பயிற்சி ரவை' தெறித்து சிறுமி வைத்தியசாலையில்

George   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதுறுஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சுடுதல் தொடர்பான பயிற்சியின்போது, இராணுவ சிப்பாய் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில்  12 வயது சிறுமி காயமடைந்துள்ளார்.

புதன்கிழமை (21) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டி56 ரக துப்பாக்கியிலிருந்து வெளியேறிய ரவை, மாதுறுஓய மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி மீது பாய்ந்துள்ளது.

காயமடைந்த சிறுமி, பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரவையானது, சிறுமியின் வயிற்றில் பாய்ந்த நிலையில், அறுவை சிகிச்சை ஊடாக ரவை அகற்றப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடும் பயிற்சியில் சுமார் 60 இராணுவ சிப்பாய்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .