2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'பரீட்சைகள் திணைக்களமே சிறந்த சேவையை வழங்கியுள்ளது'

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச திணைக்களங்களில் கடந்த காலங்களில் பரீட்சைகள் திணைக்களமே சிறந்த சேவையை வழங்கியுள்ளதாக அரச கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 38 அரசாங்கத் திணைக்களங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டுக்கு அதிகளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு திணைக்களமாக, இலங்கை சுங்கத் திணைக்களம் விளங்குகின்றது.

கலால் திணைக்களம் உட்பட பிரதான பல திணைக்களங்களை விட பரீட்சைகள் திணைக்களமே சிறப்பான சேவையொன்றினை நாட்டுக்கு வழங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் திணைக்களத்தின் கடந்த மூன்று மாத கால அறிக்கைகளின் படியே இவ்வறிக்கையானது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .