2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மூன்றாம் நிலை தலைவர் ஒருவர் வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூத்த தலைவர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மூன்றாம் நிலை தலைவர் நியமிக்கப்பட வேண்டிய தேவையாகவுள்ளதாக கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில்விக்ரம சிங்க தெரிவித்தார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஐ.தே.கவின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்று கட்சியை சிறந்த முறையில் வழிநடத்திச்சென்றார். அந்தவகையில் கட்சியை வழிநடத்த அவரால் மூன்று தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்னர்.

அதனடிப்படையில், முதலாவதாக ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இரண்டாவதாக காமினி திஸாநாயக்க மூன்றாவதாக லலித் அத்துதல் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டிருந்னர்.

இந்நிலையில் இன்று கட்சியில் முதலாம் நிலை, இரண்டாம் நிலை தலைவர்கள் உள்ள நிலையில் மூன்றாம் நிலை தலைவர் ஒருவர் நியமிக்கப்டுவது காலத்தின் அவசியமாகும்.

அப்போதுதான் எதிர்காலத்தில் கட்சியை உரு வலுவான நிலைக்கு கொண்டுசெல்ல முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X