Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோல்டன் கீ கடனட்டை நிறுவனத்தில் இரண்டு மில்லியன் ரூபாய்க்குக் குறைவாக வைப்புச்செய்தவர்களுக்கு, அப்பணத்தை மீளளிப்புச் செய்ய அமைச்சரவை, புதன்கிழமை அங்கிகாரமளித்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, நேற்று வியாழக்கிழமை (15) தெரிவித்தார்.
கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்புச்செய்தவர்கள் படும் துயரத்தைத் தீர்த்துவைக்க, மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைச்சரவை ஏற்கெனவே அனுமதியளித்துள்ளது. 'முதற்படியாக பொதுத் திறைசேரி, 2 மில்லியன் ரூபாயிலும் குறைவாக வைப்புச் செய்தவர்களுக்கு மீளளிப்புச் செய்வதற்காக 544.3 மில்லியன் ரூபாயை முதற்பணமாக கொடுத்துள்ளது' என அவர் கூறினார்.
இரண்டாவது கட்டமாக 2 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய் வைப்புச் செய்தவர்களுக்கு மீளளிப்புச் செய்யவென மத்திய வங்கிக்கு திறைசேரி 3,945.6 மில்லியன் ரூபாய் முற்பணத்தை வழங்கவும் இந்த முற்பணத்தை கோல்டன் கீ கம்பனியில் சொத்துகளை விற்று மீளப்பெறவும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவு, அமைச்சரவையின் அங்கிகாரத்தைப் பெற்றது.
கோல்டன் கீ நிறுவன வைப்பாளர்கள் 3,863 பேருக்கு முதல் தவணையை தவணைப் பணமாக 351 மில்லியன் ரூபாய் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட மீளளிப்புச் 2,500 பேருக்கு கொடுக்கப்படவுள்ளது. இந்த வகையில் 250 மில்லியன் ரூபாய் கொடுக்கப்படும்.
இக்கொடுப்பனவுகள் உயர்நீதிமன்றின் கட்டளைப்படி அமைந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
29 minute ago
33 minute ago